கூரைகளெல்லாம் உடைந்து நொறுங்க, 
கட்டிய சுவரெல்லாம் கரைந்தோட, 
சன்னல் நிலைகளெல்லாம தூசாகி, 
வாயிற் கொல்லை ஒன்றையொன்று தழுவ, 
அடுக்களை அனல் அணைய,
கிணற்றடி ஈரம் காணாதுபோக, 
அடித்தளமோ கூரைகும்பமோ இல்லாத 
இன்மையை, 
முழுமையை, 
வீடென்கிறேன்… 
— அயலவன்