
வாழ்தல் வசப்பட்டதே
வெண்ணிற வானமும் துளிர்விட்டதே
இருத்தல் இனித்ததே
இசையும் உடன்கலந்து உவப்புற்றதே
ஏடு எழுத்தால் நிறைந்ததே
மனவெளி சிந்தித்து செழிப்புற்றதே
அறியாமை அலாதியானதே
இருக்கையில் அறிவும் தோற்றுப்போனதே
கைக்குவளை தேநீர் துவண்டதே இளந்துவப்பு தேகத்தை கட்டியணைத்ததே
காற்றும் தழுவியதே
காலத்தின் கசிவாய் கதைசொன்னதே
உலகம் அழகானதே
உள்ளமோ அழகிலே மூழ்கி ஆட்டம்போட்டதே
தனிமை பொங்கிவழிந்ததே
உலகமே தனிமையில் அடங்கி ஒடுங்குதே
ஓசையும் இசையானதே
இசைக்கு இசைகையில் அலைமோதுதே
சுயம் அது மெழுகானதே
எரிந்து உருகியோடி உலகானதே
வாழ்தல் வசப்பட்டதே…
— அயலவன்