
அலாதியான மனிதர்கள்
ஆழமான உறவுகள்
என்றோ ஓர் நாள் அமைகின்றதே
ஏன்? எதற்கு? எதனால்? எப்பொழுது?
என்ற கேள்விகளையெல்லாம் அது வெல்கின்றதே
வாழ்கின்ற நாட்களுக்கு
பொருளொன்று வழங்கிடும் பொழுதாக அது ஆகுதே
சாகும் நொடியதனில் வந்தவழி காண்கின்ற
வினோதப் பொழுததனில்
பாதையில் நின்றபடி வந்தவழி காட்டுகின்ற
உயர்வான ஓர் உறவே
வீழும் பொழுதிலும் வெல்லும் நாளிலும் உடன் நிற்கும் ஓர் கரமே
உன்னோடு நான் இருக்கும் ஒவ்வொரு மனித்துளியும்
சுய எல்லைகள் வளைகின்றதே
அங்கு நீ எங்கே? நான் எங்கே? இருவேறு சுயமெங்கே?
அவை ஒன்றான நிலையாகுதே
அங்கு நாம் உண்டு, நமதுண்டு, நம்மோடு பலவும் உண்டு
உன்னதப் பொழுதாகுதே…
— அயலவன்