வெண்ணிற மணலின் வெப்பந் தணித்து, நிலமகளைப் புணரும் பெருங்கடலை,
மேகக் கூட்டத்துள் தலை நுழைத்து, வானத்து இரகசியங்களை ஒட்டுக் கேட்கும் மலையை,
வேங்கை போலாகிக் கதிரவனும், பதுங்கியே பாயும் காட்டை,
மலை காடு அலைந்து, அனுபவப்பட்டு, கடல் வந்து சேரும் நதியை,
தூரத்து சொந்தங்களின் அணிவகுப்பாய், இரவு மௌனத்தை கொண்டாட்டமாக்கும் வானத்தை,
அந்தத்து சாட்ச்சியாய் ஆங்காங்கே குவிந்து, அங்கத்தை ஒரு நாள் தழுவத் துடிக்கும் தீயை,
காலத்தை பகடி செய்து, வானமளந்து, நிரந்தரத் தவங்கிடக்கும் பெருமரத்தைக் காணுபோதெல்லாம்
நீ உன்னைக் கண்டிருக்கிறாயா?
எப்படி இருந்தாய்
இருந்தாயா
— அயலவன்