
உள்ளதை உள்ளபடி உளத்தொன்று உரைக்கும்.
அதை உள்ளவாறு உள்ளெடுக்க உள்ளதொன்று தடுக்கும்.
உள்ளவை எவ்வகை என உள்ளபடி கேட்டால்,
அவை இன்னவை இவ்வகை என உள்ளே ஒன்று உரைக்கும்.
உலகிலே உள்ளதை உட்கலந்துணர்ந்ததை
உவமையோடுறைக்கையில் உள்ளமே உவக்கும்.
உள்ளதை உள்ளபடி உள்ளெடுத்துரைக்க
அவை யாவோடும் பிணைந்த உன் உள்ளமே தடை.
உலகிலே உள்ளவும் உணர்பவன் உள்ளமும்
வேறென்ற நிலையிலே உள்ளதிந்த தடை.
உலகும் உணர்வும் உள்ளமும் ஒன்றிய நிலையத்தில்,
தடையென்ன விடையென்ன கடையென்ன சொல்!
— அயலவன்