
கொண்டாட்டமும் கோலாகலமுமாய் வீடு!
நீரூற்ற யாரும் இல்லாததால் மாடத்தில் வாடிக்கிடந்தது துளசிச்செடி…
காய்ந்து தொங்கிய இலைகளில் பாய்ந்தொளிரும் புன்முறுவல்,
“ஆடிக்கொள் நீ இன்று, தற்காலிகத்தின் மெல்லிய தாலாட்டிற்கு!
துன்பமென்றும் தும்மலென்றும் நீ என்னிடம் வரும்போது சந்திப்போம்” என்பது போல்…
— அயலவன்