
தனிமையை கலையாக்கி சமைக்கிறேன்.
உணவுத்தட்டுக்கள் பரிமாறப்படினும்,
வாய் புகும் சோறு மற்றொரு தனிமையின் குடலில்தான் விழுகிறது.
ருசி குறித்து கருத்துக்கள் பரிமாறப்படினும்,
அந்த அனுபவத்தை அறியாது துடிக்கிறது மற்றொரு நாக்கு.
கரண்டி பிடிக்கும் கைக்கு தெரியுமா,
வாய் புகாத சோற்றின் சுவையை?
கலைக்கு விறகாகும் தனிமைக்கு தெரியுமா,
அதை செரிக்கும் வெப்பத்தின் சூட்டை?
— அயலவன்