
சாவை நிர்ணயித்துவிட்டேன்.
இன்னும் ஏன், செத்தேவிட்டேன்.
பிணமாய் பிறப்பெடுத்தேன்.
போர்க்களங்கள் விளையாட்டுத்திடல்கலாயின.
பிணந்தின்னிப் பருந்தின் ஆசை முத்தம்
என்னை கலையாக்கி மண் சேர்த்தது.
சகப் பிணங்கள் உறவாயின.
சாவே எங்கள் அன்பானது.
சாவை மோகித்து புணர்ந்தேன்.
பெற்ற பிள்ளைக்கு சோறூட்டி வளர்த்தேன்.
பிள்ளையே நானென்று நம்பியபோதெல்லாம்
சாவின் நகை கண்டு தத்தளித்து நின்றேன்…
— அயலவன்