
போர்களத்தில் பிறந்த பிள்ளை நான்
வன்முறை என் அன்றாடமாகிவிட்டது
அமைதியின் அழகில் நான் அவதியுறுகிறேன்
வெறுப்புடையோர் கை வளர்ப்பில் பிழைத்தவன் நான்
வஞ்சம் வளர்த்த உறவுகளே மேலோங்கி நிற்க
அன்புடையோர் கையணைப்பில் அஞ்சுகிறேன்
அனல் ஜ்வாலையில் உதித்தவன் நான்
ஆரிடாத் தீக்காயங்கள் தோலினை அலங்கரிக்க
குளிர்நீரின் இதவருடல்கூட மேனியை உலுக்குகிறது
வீரக்கழல் மெதிப்பில் வளர்ந்தவன் நான்
விழுப்புண்களில் அடையாளம் கொண்டாலும்
பணிந்திடும் மலர்பாதம் பற்றுகையிலும் பதற்றமே பெருகுகிறது
காலன்வாய் புகுந்த சோர் பருக்கை நான்
அந்தத்தால் வீழ்ங்கப்பட காத்திருக்கிறேன்
முடிவற்ற இச்சுயத்தின் கூரினை சிந்திக்க சித்தமே கலங்குகிறது…
– அயலவன்