Skip to main content

பெருவிளையாட்டில் என்னை இழக்கிறேன்

54 words
Pallavaram Hills
Photograph: Neeraj Bharadwaaj

குடியிருப்பு நெரிசல்களுக்கிடை கண்சிமிட்டும் கடல்.
நடுநிலைமை அறியாது அரற்றும் நாவில், எங்கோ பீரிடும் ஒரு சொட்டு உண்மை.
சட்டென சின்னதாகி,
ரோமம் சிலிர்த்து,
இங்கே கால காலமாய் இருப்பவற்றோடு ஒரு சொட்டாகிக் கலக்கிறேன்.
ஆதியந்தமின்றி ஓயாது அடிக்கும் அலைகளின் மேல்,
காலன் ஈன்றச் செல்லக் குழந்தைகள் களிக்க,
ஒரு பெரு விளையாடலில் என்னை இழக்கிறேன்.
மனிதக் கட்டுமானங்களெல்லாம் கடலில் மிதக்க,
நீராகி,
வான்புகுந்து,
வரம்பற்ற வெட்ட வெளி மைதானத்தில்,
ஏதுமின்மையாகி,
இருக்கிறேன்…

Neeraj Bharadwaaj
Author
Neeraj Bharadwaaj
Unapologetically curious