
பார்வையாலே கட்டியணைத்தேன் அவளை, முகம் சிவந்தாள் சிங்காரி ;
சாயும் பொழுதினில் உள்ள ஆகாயமாய்,
வாழும் நொடியினில் உள்ள சிற்றின்பமாய்,
நாணத்தால் பழுத்த செவ்வானம்,
மேகமும் தேகமும் சிவந்து சிரிக்க
மோகம் வளர்த்து காத்திருந்தேன்,
அனல் பந்தையொத்த வெறுமையிலே,
அவள் வெட்கத்தை தொடரும்
இருளிலும்,
அமைதியிலும்
என்னையே மறைத்துக்கொள்ள…
— அயலவன்