கற்சிலையோ, கோயிலோ
கள்ளக் கற்பனையோ, கடவுளோ
காப்பானோ, காலனோ
காற்றோ, கதிரோ
காதலோ, கலையோ
கருத்தோ, கற்றக் கல்வியோ
கானலோ, கடற்கரையோ
மதமோ, மாமனிதனோ
மனிதமோ, மகத்துவமோ
மருந்தோ, மரச்செடியோ
மறையோ, மரபோ
நம்புவோற்கிங்கு அதிசயங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது…
— அயலவன்