Skip to main content

நம்பிக்கை

68 words
poetry
Photograph: Vaibhav PH

கண்முன்னே கற்சிலை ஒன்று,
கண்களுக்கெட்டாக் கடவுளின் உருவாய்;
கற்சிலை கடவுளானது கற்பனையின் வித்து;
புலனடிமைகளை நிஜத்தின் வெப்பம் வதைக்கையில்,
நிழலில் இளைப்பாற ஒரு கற்பனை மரம்;
புலனடிமைகள் பதவி உயர்ந்து பரத்தின் அடியில் கிறங்கிக் கிடக்க;
சங்கிலிகளுக்கு தங்கக் காப்பு,
கதவுகளுக்கு வெள்ளிப் பூட்டு,
சுவர்களுக்கு பல்வண்ணச் சாந்து.
கற்பனை கற்சிலையானபின்,
அதன் அற்புதங்கள் கற்பிதங்களாகி,
நம்பிக்கை நாகரீகத்தின் நடுவே;
நம்புவோர்க்கு நன்நிழல் ஒன்று,
நம்பாதோர்க்கு நரகக் குளிர்;
உள்ளத்தில் உணர்ச்சிப் பொங்கி,
மெழுகாய் உருக,
கற்பனைமுன் மண்டியிடும் மனித மனம்,
“நம்பிக்கை” எனும் உன்னதப் பெயர் தாங்கி…

— அயலவன்

Neeraj Bharadwaaj
Author
Neeraj Bharadwaaj
Unapologetically curious