
கடற் காற்று முகம் வருட,
காப்பி நெடி மூக்கைத் துளைக்க,
சுயத்தில் பதியும் சொற்கள் ஒலிக்க,
நினைவில் மலரும் பொழுதுகள் நீள,
சிந்தனையோடு சிரிப்பும் கலக்க, புன்னகையோடு புரிதல்களும் வளர,
கடிகார முள்ளும் சிதறி உடைய,
அரைத்த மாவு மீண்டும் அரைய,
புதிய உளுந்து ஒருபுறம் ஊற,
கவிதை வரிகள் கதவை தட்ட,
இசையும் ஓரத்தில் அழகைக் கூட்ட,
இரண்டு பாடல்களுக்கு இடையே
மலர்ந்தது எங்கள் உறவு…
— அயலவன்