
கிழித்த கோடுகள் கிழிந்துக் கிடக்கையில்,
தளும்பாத நீர்குடம் பொங்கி வழிகையில்,
துள்ளாத இதயமொன்று துடிப்பற்று போகையில்,
நில்லாத சுழலே நிரந்தரமாக்கிக் கிடக்கையில்,
வற்றாத நதியொன்று வெள்ளம் பெருக்கெடுத்தோடுகையில்,
சொல்லாத மொழியெல்லாம் மௌனத்தோடு முடிகையில்,
செதுக்கிய கல்லொன்று சிலையாகி உறைகையில்,
மெய்ப்பட்ட கனவுகளில் கரைந்திடாத ஆசைகளாய்,
கைகூடிய பொழுதுகளில் முடிந்திடாத ஏக்கங்களாய்,
அன்றாடத்தில் அடைகின்ற அன்பாய்,
பண்பாட்டிலே கசிகின்ற புதுமையாய்,
தொடர்கிறது நமது சஞ்சாரம்…
– அயலவன்