
கண்ணைக் கட்டிக்கொண்டு கண்ணாடியை பார்க்கிறேன்.
என்னைப் பற்றிக் கொண்டு வாழ்க்கையை வாழ்கிறேன்.
அறிவை வைத்துக்கொண்டு அனைத்தையும் அளக்கிறேன்.
பிரிவை எண்ணி உறவையும் துறக்கிறேன்.
கூச்சலிட்டபடியே அமைதியைத் தேடுகிறேன்.
நிஜத்தில் வாடியபடி நிழலை நாடுகிறேன்.
வெறுமையில் விற்றபடி மக்களை பார்க்கிறேன்.
துறவர நிலையில் பந்தங்கள் வளர்கிறேன்.
அறியாமையை அறிய அனுதினம் விழைகிறேன்.
மொழியை வளர்த்தபடி மௌனத்தை புரிகிறேன்.
விடைகள் சொல்லிவிட்டு வினாவை படைக்கிறேன்.
எழுதவும் செய்து விட்டு எண்ணத்தை தொலைக்கிறேன்.
பழகவும் பழகிவிட்டு பாசத்தை மறக்கிறேன்.
அறுசுவை விருந்துண்டு விரதமிருக்க நினைக்கிறேன்.
பருவமும் எட்டியபின் குழந்தையாகி சிரிக்கிறேன்!
— அயலவன்