
வெளுக்கத் துவங்காத கருவானம்.
காற்றோடு கலக்காத பனி ஈரம்.
தீட்டிய கருவியோடு காத்திருந்த மரப்பலகை.
வருவார் பசி போக்க கூண்டில் துடித்திருந்த சதை உடல்கள்.
ஓங்கிய கைவீச்சினால் ஒருமுறை தன்னிடமிருந்தே விடுதலை.
கறிக்கடை சூழும் அதிகாலை குளிர் விரட்டும் குருதி,
கலை,
என்னைக் கொன்று பசி போக்கும் துடிப்பு….
— அயலவன்