
நானென்பது ஒழிந்துபோனால்,
என்வழி பிறக்கும் கலை என்பதென்ன,
உள்ளதொத்தப் படைப்புகளுக்கப்பால்?
மற்றதின் நீட்சியைக் கடந்து,
நான் பகிர்ந்த உயிரைத் துறந்து,
சுவாசிக்க இயலுமா அதனால்?
சுவாசிக்கத்தான் வேண்டுமா?
நீள்வதென்ன கோட்டின் பிழையா?
தன்னுள் கலப்பதென்ன வட்டத்தின் குறையா?
வடிவங்களைக் கடப்பதென்ன கலையின் நிமித்தமா?
— அயலவன்