முடிவிலாத பெருவானம்,
குவியல் குவியலாய் மலை மேடு,
சலிப்பே அறியாத நதியோட்டம்,
ஒய்யாரமாய் நிழல் தீட்டும் பெருமரம்,
பூத்துக் காய்த்து வானில் பழுக்கும் வெண்ணிலா,
உரிந்து உரிந்து உள்ளம் தேடும் கடும்பாறை,
விண்மீன்களுக்கு ஏணி போடும் செந்தீ,
மேகத்தைக் குழப்பிவிடும் பறவைக் கூட்டம்,
இசை மீட்டும் பூச்சி,
சித்திரம் வரையும் வண்டு,
அளித்து மாளாத மண்குழம்பு.
இங்கு வாழும் மனிதனுக்கு கடவுள் வேறு தேவைப்படுகிறது…
— அயலவன்