Skip to main content

கட-உள்

33 words
poetry
Photograph: Neeraj Bharadwaaj

சொற்கள் சாகையில்தான்
எழுத்து பிறக்கிறது.
அமைதி கேட்கையில்தான்
இசையும் ஒலிக்கிறது.
கல்லும் கழிகையில்தான்
சிலை எழுகிறது.
சுயமும் சிதைகையில்தான்
காதல் மலர்கிறது.
கட்டடம் நொறுங்கையில்தான்
வீடும் அணைக்கிறது.
உள்ளம் உரிகையில்தான்
எண்ணம் தோன்றுகிறது.
படைப்பும் சாகையில்தான்
கடவுள் பிறக்கிறது…

— அயலவன்

Neeraj Bharadwaaj
Author
Neeraj Bharadwaaj
Unapologetically curious