ஞானத்திடல் என்றெல்லாம் கூறி,
வேதப்பொருள் என்றெண்ணித் துதித்து,
ஓதியும், பாடியும் ஓங்காரமிட்டு,
தேடி நாடி ஓடிவந்துப் பணிந்திடும் மலை பின்புலத்தில் கிடக்க,
அடியார் வீட்டு மாடியில், 
தவிர்க்கவியலா அன்றாடமாய்,
அனுதினம் அமர்ந்து உய்க்கும் கழிப்பறை
கண்முன்னே கிடக்க
“இதில் எது புனிதம்? " என்ற கேள்வி மனத்தில் எழுந்தது.
ஆயிரமாயிரம் அடியார் பணிந்திடும் அண்ணாமலையா?
மலை பணிந்த அடியார் அனுதினம் புகும் கழிப்பறையா?, தன்னையே மரக்கும் அனுபவம் இவ்விரண்டிலும் உண்டென்ற பட்சத்தில்…
— அயலவன்