கொத்தமல்லி வாசன எங்க இருக்கு, மூக்குலையா இலையிலையா?
கடலலை எத தீண்டுது, மணலையா மனசையா?
நா இல்லனா தீ சுடுமா?
தாகம் இல்லாத உலகத்துல தண்ணிக்கு இடம் இருக்கா?
மனுஷன் இல்லாத உலகத்துல அழகு இருக்கா?
யாரும் இல்லாத தனிமையில அன்பிருக்கா?
வானமே எல்லையா இருக்குற பறவைக்கு சுதந்திரம் வேணுமா?
காலமே நிலையா இருக்குற நிஜத்துல நா இருக்கேனா?
மனுஷனோட இயலாமையின் விளைவுதான் உண்மையா?
அந்த இயலாமையின் கொண்டாட்டம்தான் கலையா?
நிலையாமையும் இயலாமையும் இல்லாமையும்தான் சாவுன்னா, அதுதான் நானா?
சாவையும் விட்டுக்குடுத்த என் இந்த இருப்பு என்ன?
— அயலவன்