இடப்பெயர்வே அடையாளம். நகர்வே நாதம். மூக்கில் மாறும் பயணத்தின் வாசங்கள். சுவாசத்தில் புகும் நிலையாமையின் ஓசைகள். காலமே வாகனமாய், சாவே சகப்பயணி.
சந்திர சூரியன் கதை சொல்ல,
விண்மீன் கூட்டம் கண்டுகளிக்க,
மரமும் மலையும் வேடம் பூண,
நதியும் நிழலும் இசை மீட்ட,
சாரலும் மேகமும் உள்ளங் கிளற,
சாலையும் வேளையும் மேடை போட,
அரங்கேறும் சஞ்சார காவியம்.
சுற்றமும் நட்பும் நினைவில் மலர, அன்பும் காதலும் அசை போட்டு சுவைக்க, வீடும் வாசலும் உடல்மேல் தொங்க, துன்பமும் துயரமும் விழியில் பூக்க, பயணம் நீள்கிறது, உலகம் காக்கிறது, அன்பு மகனுக்கு அனைத்தையும் காட்ட…
— அயலவன்