
எங்கே போனாயோ என் பெருஞ்சிங்கமே?
இங்கு யார்தான் எங்கு போவது?
உடலைத்தான் நீத்தாயே அன்றி, உலகை அல்ல!
நீ தீட்டிய பல வண்ணங்களாய,
நீ கிறுக்கிய பல எண்ணங்களாய்,
நீ ஏற்படுத்திய தாக்கங்களாய்,
உனக்கான ஏக்கங்களாய்,
உற்றவர் மனத்தில் நினைவுகளாய்,
மாளாத உன் வினைகளாய்,
கற்றவர் அறிவில் வியப்புகளாய்,
உன் வழி உதித்த மற்றவர் உடலில் பாய்கின்ற உயிர் நாடியாய்,
வாழ்வாங்கு வாழ்ந்திட வாழ்த்துகிறேன்!
கல்யாணசுந்தரனே!
அந்தமறு!
- அயலவன்