எனது எனினும் நான் என்ற எல்லைக்கு அப்பால் இருக்கிறது, 
என் இறுதி அஞ்சலி ஊர்வலத்தின் மகிமைகள். 
உன் பிணத்தை நான்தான் தூக்கினேன் என்று தாத்தாவிடம் சொல்லவேண்டும். 
நான் செத்த கதையை சிரித்தபடி கேட்டு சிந்தித்து மகிழவும் வேண்டும். 
சாவைத் தொடர்ந்து பணிகளோ ஏராளம். 
இல்லாத நான் எண்ணி ஏங்குவதால் என்ன பயன்?
— அயலவன்