சின்னச் சின்ன நெருக்கங்களில் உலகம் சுழலக் காண்கிறேன். பீடிப் புகை உரையாடலுக்கிடையில் பாலம் எழக் காண்கிறேன். பிட்டடிக்க உதவும் நண்பனின் துடிப்பில் கல்லூரி இயங்கக் காண்கிறேன். குடை பகிரும் மனிதர்களுக்கிடையில் பெரும்புயல் வீசக் காண்கிறேன். உள்ளம் உரசும் உரையாடலுக்கிடையில் வாழ்க்கை விரியக் காண்கிறேன். சிந்தை சிலிர்க்கும் கற்பனைக்கிடையில் பேரண்டம் திகழக் காண்கிறேன்…
— அயலவன்