Skip to main content

அதுவே போதுமாய் இருக்கிறது...

50 words
cover
Artwork: Maithreyi R

தெய்வங்களின் முன்னே கரைந்துவிடுகிறேன்.
நிரூபணங்கள் தேவைப்படுவதில்லை.
எனக்கப்பால் ஒன்றின் கற்பனையே அலாதி பரவசம் அளிக்கிறது.
தத்தளித்து ஓயாத தன்னந்தனிமையில்
மெத்தனித்து எழும் கற்பனை.
ஆகச்சிறந்த கற்பனைகளுக்கு சொந்தக்காரர்கள் இல்லை.
அவை பொதுவெளியின் பொக்கிஷங்கள்.
பொதுப்பணிக்காக மனிதன் நேர்ந்துவிட்ட கற்பனை கடவுள்.
பிறப்போ, இறப்போ, ஓர் உருவோ இன்றி,
நிரந்தரத்தில் அநாதையாய் அலைந்து,
உன்னதங்களை நிகழ்த்தித் திரியும் கட்டற்ற கற்பனை.
அதுவே போதுமாய் இருக்கிறது.

— அயலவன்

Neeraj Bharadwaaj
Author
Neeraj Bharadwaaj
Unapologetically curious