
உடன் பிறந்தால்தான்
உறவுகளா என்ன?
வந்தடைந்தாலும் அவை
அஃதன்றோ?
முடிந்தால்தான் அவை
நினைவுகளா என்ன?
திகழும் இன்னோடியேயது
அஃதன்றோ?
கதைத்தால்தான் அவை
முயற்சிகளா என்ன?
மனதுள் நினைத்தாலேயது
அஃதன்றோ?
மடிந்தால்தான் அவை
பொருள்பெறுமா என்ன?
முடியும் இந்நொடிக்கேயவை
அஃதன்றோ?
அகச்சிந்தையால் இணைவோற்கு
விதி என்ன?
இவ்விணைப்பின் விளைவே
அஃதன்றோ?
நிலையான உரவிங்கு
உண்டா என்ன?
எனக்கேட்பார் தொடர்பே
அஃதன்றோ?
சிதையாத உடல்
இங்குண்டா என்ன?
சிந்திக்கும் இச்சுயமே
அஃதன்றோ?
மாயாத உரவிங்கு
உண்ட என்ன?
இவ்வரிகளே அதன்
உயிரன்றோ?
— அயலவன்